பீளமேடு அருகே மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்ற ரயில்வே ஊழியர்கள்!

பீளமேடு அருகேயுள்ள வார்டு எண் 26-ல் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், ரயில்வே ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: பீளமேடு அருகேயுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

கோவை மாநகராட்சி வார்டு எண் 26-ல் பீளமேடு ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே APJ அப்துல் கலாம் பூங்கா நிர்வாகிகள் சார்பில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி காலை 7 மணிக்கு ரயில்வே தலைவர் சுவாமிநாதன் தலைமையில் விஜயன் செல்வம், மகேஷ் ராஜராஜன் முன்னிலையில் ரயில்வே ஆய்வாளர் தங்கவேல் பீளமேடு ஸ்டேசன் மாஸ்டர் கோமதி ஆகியோர் பரிந்துரை பேரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்றது. 



இந்த நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஜி 18 ட்ரஸ்ட் பார்த்திபன் யோகராஜ், பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் பூவே கோபால், வழக்கறிஞர் ஆனந்த், பொன்னுசாமி, சண்முகம், நந்தகோபால், சிவதாஸ், சக்திவேல், சந்திரிகா மற்றும் பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நடவு செய்தனர்.

இதனையடுத்து அனைவரும் இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், குப்பையில்லா நகரத்தை உருவாக்க முயற்சி செய்ய குழு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...