சூலூரில் தனது சொத்தை தந்தையிடம் இருந்து மீட்டுத்தர கோரி 13வது நாளாக 50 வயது பெண் உண்ணாவிரதம்!

கோவை மாவட்டம் சூலூரில் சுமதி என்பவர் 28 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலத்தை அவரது தந்தை பழனிசாமி, வேறொருவருக்கு விற்பனை செய்த நிலையில், தனக்கு சேர வேண்டிய சொத்துகளை தந்தையிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி சுமதி (50) 13வது நாளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



கோவை: தனக்கு சேர வேண்டிய சொத்துகளை தந்தையிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி 50 வயது பெண் ஒருவர் 13வது நாளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 



கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மனைவி சுமதி. இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு சுமதியின் தந்தை பழனிச்சாமி, சுமதிக்கு சூலூரில் 3.80 ஏக்கர் நிலத்தினை பயன்படுத்தி கொள்ளுமாறு கொடுத்துள்ளார்.

28 ஆண்டுகளாக சுமதி அந்த நிலத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திடீரென சுமதியின் அனுபவத்தில் உள்ள அந்த நிலத்தை அவரது தந்தை பழனிச்சாமி, திருப்பூரை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். 

நிலத்தை வாங்கிய ராமசாமி என்பவர் சுமதியை நிலத்தை காலி செய்யுமாறு வற்புறுத்தி உள்ளார். தான் வாங்கிய நிலத்தை சுமதி குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதை மீட்டுத் தருமாறு ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சுமதியின் அனுபவத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்தது செல்லாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி சுமதியின் நிலத்தை வாங்கிய ராமசாமி கோவையைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். 28 ஆண்டுகளாக தனது அனுபவத்தில் உள்ள நிலத்தை நம்பி தான் தனது வாழ்வாதாரம் உள்ளதாகவும் தனக்கு சேர வேண்டிய சொத்தினை தனது தந்தை தர மறுப்பதாகவும் கூறி கடந்த 13 நாட்களாக சுமதி தனது சொந்த நிலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமதியிடம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தினை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.



குடும்ப பிரச்சனையை அடியாட்களை வைத்து பொது பிரச்சினையாக சிலர் மாற்றுகிறார்கள் எனவும் விவசாயி சுமதியின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரும், கள் இயக்க கூட்டமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...