கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் - திருப்பூர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மனு!

திருப்பூர் மாநகராட்சிக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதை கண்காணித்து ஆய்வு செய்து தடுப்பதற்கு மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூருக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கேரள அரசு கட்டும் அணையை தடுக்க கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். 

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 21 பேர் மாநகராட்சி ஆணையர் பவன் குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 



அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக உள்ள பில்லூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கின்ற விதமாக கேரளா அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதை கண்காணித்து ஆய்வு செய்து தடுப்பதற்கு அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க வலியுறுத்தி கடந்த மாமன்ற கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்த புள்ளி விபரத்தில் முழுமையான விதிமுறைகளை அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களை ஏற்கனவே பணிபுரிந்து வரும் அந்தந்த பகுதிகளிலேயே பணியில் அமர்த்த வேண்டும், மாநகராட்சி 45 வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...