கோர்பா - எர்ணாகுளம் விரைவு ரயிலில் பயணியிடம் 10 சவரன் நகையை திருடிய கோவை இளைஞர் கைது!

கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த சேலத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரிடம் 10 சவரன் நகையை திருடிய கோவையை சேர்ந்த ராஜேஷ்குமார் (41) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் பயணியிடம் 10 சவரன் நகையை திருடிய கோவையை சேர்ந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி (61). இவர் கடந்த 11 ஆம் தேதி கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில், சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி தனது மகள் வீட்டுற்கு சென்றுள்ளார். 

அப்போது திருப்பூர் - கோவை இடையே வந்த போது அவரது பையில் வைத்திருத்த 10 சவரன் நகை மாயமானது. இதையடுத்து ரத்தினசாமி கோவை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த கோவை குறிச்சியை சேர்ந்த ராஜேஷ்குமார் (41) என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். அப்போது அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் நகைகளை வைத்திருந்தது தெரியவந்தது. 



இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...