ஏராளமான கடன் வாங்கிய மகன் - மனமுடைந்த தாய் தந்தை விஷம் குடித்து தற்கொலை!

திருப்பூர் அடுத்த நீதியம்மாள் நகரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் சார்லஸ், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், 15 லட்சம் கடன் வாங்கியதை தொடர்ந்து, கடன் கொடுத்தவர்கள் அவரது தந்தை அலெக்சாண்டரிடம் பணத்தை கேட்டு தொல்லை செய்த நிலையில், மனமுடைந்த தாய் - தந்தை இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் மகன் ஏராளமான கடன் வாங்கிய நிலையில், கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்ததால், மனமுடைந்த தாய் தந்தை இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் நீதியம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர் - அமலோற்பமேரி தம்பதி. இவர்களது மகன் சார்லஸ் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து தொழிலை நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் சார்லஸிடம் பணம் கேட்டதால், அவர் வீரபாண்டி பகுதியில் குடியேறியுள்ளார். அதனால் பணம் கொடுத்தவர்கள் சார்லசின் தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததால், மனமுடைந்த அவர் தனது மனைவியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

கணவன் மனைவி இருவரும் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர்‌ சென்று பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. 

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...