கோவை தெற்கு தொகுதியில் நியாய விலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். 



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, நியாய விலை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், விற்பனை முனைய இயந்திரத்தில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருள்களின் விவரங்கள், கடைகளில் தற்போது உள்ள இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். 



மேலும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கு பொருள்கள் வழங்கப்படுவதை கண்ட அவர் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். 



பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ரேஷன் கடையில் ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...