சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை கைது செய்ய வேண்டும் - தமிழ்நாடு யாதவர் மகா சபை ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை: சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில் சிதம்பரம் கோயிலில் சாமி கும்பிட வந்த யாதவர் இன முதியவரை ஆபாச சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விட்டு, அடித்து தாக்கிய தீக்‌ஷிதர்களை உடனே கைது செய்!, நடராஜர் அனைத்து சாதி மக்களுக்குமானவர்!, தீக்‌ஷிதர்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாதே!!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த போஸ்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒட்டப்பட்டுள்ளன. 

அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று தீக்‌ஷிதர்களால் வைக்கப்பட்ட பதாகையால் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...