கல்குவாரிகள், கிரஷர்கள் வேலை நிறுத்தத்தால் அரசு கட்டுமான பணிகள் முடக்கம்!

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் வேலை நிறுத்தத்தில், லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்களும் ஈடுபட்டுள்ளதால் பல்லடத்தில் நடைபெற்று வந்த தார் சாலை பணிகள் மற்றும் அரசு கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.



திருப்பூர்: கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் வேலை நிறுத்தத்தால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்று வரும் தார் சாலை மற்றும் அரசு கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது.



தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக கல்குவாரிகள் கிரஷர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கிரஷர் குவாரி ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனங்களின் சுமார் ஆயிரக்கணக்கான லாரிகள் ஜேசிபிகள் பொக்லைன் போன்ற இயந்திரங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று ஒரே இடத்தில் தங்கள் எதிர்ப்பை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகளும் 200க்கும் மேற்பட்ட கிரசர்களும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நேர்முக தொழிலாளர்களும் லட்சக்கணக்கான மறைமுக தொழிலாளர்களும் பாதிக்கப்படும் வகையில் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் நாளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்தந்த மாவட்ட சங்க நிர்வாகிகள் சந்தித்து தங்களுடைய 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளனர். தொடர்ந்து 2014 நடைமுறையை அமல்படுத்தி சுற்றுப்புற சூழல் துறை தங்களுக்கு ரினிவல் செய்யும் ஆண்டு கல்குவாரிகளின் ஆழத்தை அதிகரித்து தர வேண்டும்.

கேட்கும் அளவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும் சமூக ஆர்வலர்கள் போர்வையில் தங்களை பிளாக்மெயில் செய்கின்றனர்.

அது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இவர்களின் போராட்டம் தற்போது 15 அம்ச கோரிக்கையுடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இப்பகுதியில் போராட்டத்தை பார்வையிட வந்த மாநில பொருளாளர் பாலசுப்பிரமணி என்பவர் இப் போராட்டத்தால் விலை ஏற்றம் இருக்காது என்றும் அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...