தொண்டாமுத்தூர் பகுதியில் 356 பயனாளிகளுக்கு வீடுகட்டும் ஆணையினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 356 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்குவதற்கான நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 88வது வார்டு மூவேந்தர் நகர், 92-வது வார்டு பி.கே.புதூர், 91-வது வார்டு சத்யா நகர், 90-வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் கோவைப்புதூர், 89வது வார்டு சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 356 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களின் சார்பில் மாநிலத்தில் ஊராட்சி முதல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் தனிநபர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய விண்ணப்பதாரர்களுக்கு சொந்த இடம் இருந்தால் போதும் பயன்பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ரூ.2.10 லட்சம் கட்டிடம் கட்ட பற்றாக்குறை ஏற்பட்டால் வங்கிகள் மூலமாக ரூ.70,000 கடனுதவி பெற்றுத்தர குடிசை மாற்று வாரியம் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுதவிர பெரியளவு வீடு கட்டுவதற்கும், குறைந்த வட்டியில் ரூ.6 லட்சம் வரை வங்கிகடன் வழங்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் இதுபோன்ற அரசின் திட்டங்களை தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி எல்லோரும் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன், மாநகர சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...