கார் நிறுத்துவதில் தகராறு - கணவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது மனைவி புகார்!

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவையில் அடுக்குமாடி கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி லக்ஷ்மி தேவி இருவரும் குழந்தைகளோடு அப்பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகின்றனர்.

அதே குடியிருப்பில் கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் காசிபாண்டியன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆய்வாளர் காசி பாண்டியன் தனது காரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள “நோ பார்க்கிங்” பகுதியில் நிறுத்தியதாக தெரிகிறது.



இதை பார்த்திபன் தனது செல்போனில் புகைப்படமாக எடுத்து அதை குடியிருப்பு உரிமையாளர்கள் whatsapp குழுவில் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் காசி பாண்டியன், பார்த்திபனுக்கு செல்போனில் அழைத்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசி மிரட்டியதாக தெரிகிறது.

இதனிடையே ஆய்வாளர் தனது குடும்பத்துடன் பார்த்திபனின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கியதாகவும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பார்த்திபன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் பாதிக்கப்பட்ட பார்த்திபனின் மனைவி லட்சுமி தேவி இது குறித்து காவல்துறையில் புகார் எடுக்க மாட்டார்கள் என்பதற்காக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...