மத்திய அரசை கண்டித்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்தவெளி மாநாடு!

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், LPF, AITUC, HMS, MLF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.


கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது.

நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.



குறைந்தபட்ச மாத ஊதியம் 28 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 10,000 வழங்க வேண்டும், வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கிட வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பத்து சதவீதத்திற்கு மேல் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்க கூடாது, தமிழ்நாட்டில் உள்ள என்.டி.சி ஆலைகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து ஆலைகளையும் உடனடியாக இயக்கி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.



இவ்வாறான 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் LPF, AITUC, HMS, MLF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் திறந்த வெளி மாநாடுகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் முதல் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இதில் எஸ்.எம்.எஸ். மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார்.

மேலும் இந்த மாநாட்டில், LPF தமிழ்செல்வன், AITUC ஆறுமுகம், INTUC சண்முகசுந்தரம், CITU ரத்தினகுமார் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...