இனி மாணவர்களுடன் நமது பயணம்..! - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஃபேஸ்புக் பதிவு!

தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு சமீபத்தில் ஓய்வுபெற்ற நிலையில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம். நீங்கள் ஆக முடியாது என்பது எதுவுமில்லை என பதிவிட்டுள்ளார்.


சென்னை: காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு மாணவர்களுடன் பயணிக்க போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெறுவதையொட்டி சைலேந்திரபாபுவை நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், சமூகப் பணிகளை தொடர்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சைலேந்திரபாபு ஒய்வு பெற்றதை தொடர்ந்து, தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், டிஜிபி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம். நீங்கள் ஆக முடியாது என்பது எதுவுமில்லை; வாங்க முடியாது என்பது ஏதுமில்லை; செய்ய முடியாது என்பதும் ஏதுமில்லை என பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...