கோவை காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாத சாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் துவக்கம்!

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக பொதுமக்களே உபயோகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாத சாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னலை கோவை மாநகர போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையர் மதிவாணன் துவக்கி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் அருகே பாத சாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னலை கோவை மாநகர போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையர் மதிவாணன் துவக்கி வைத்தார்.

காந்திபுரம் அடுத்த நஞ்சப்பா சாலையிலுள்ள நகர பேருந்து நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் சாலையை கடந்து வருகின்றனர்.



இந்த நிலையில் இன்னர் வீல் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்களே பயன்படுத்தும் வகையில் பாதசாரிகளுக்கான பிரத்யேக ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் மதிவானன் பங்கேற்று சிக்னல் செயல்பாட்டை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



அதிகளவில் பாதசாரிகள் சாலையை கடக்கும் பகுதி என்பதால் இங்கு ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த சிக்னல் முழுக்க முழுக்க பொதுமக்களே உபயோகிக்கலாம். 120 வினாடிகள் இடைவெளியில் பொதுமக்கள் சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்தி பச்சை விளக்கை எரிய வைத்து சாலையை கடக்கலாம்.

இதேபோல் மாநகரில் அதிக அளவில் பாதசாரிகள் சாலையை கடக்கும் பகுதிகளில் இதுபோன்ற ஸ்மார்ட் சிக்னல்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் சிக்னல் இல்லா போக்குவரத்து நடைமுறைப்படுத்திய பிறகு சாலை விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளது.

எங்கெல்லாம் சிக்னல்கள் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் உள்ளது என ஆய்வு செய்து வருகிறோம். இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் கோவையில் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் கடந்த நான்கு நாட்களாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் வாரம் முதல் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிப்பது கடுமையாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...