கோவை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 2.5 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திறப்பு!

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பி.எஸ்.ஜி.டெக் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் சுமார் 2.5 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக இன்று திறக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை இன்று திறக்கப்பட்டது.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.



இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.



இங்கு மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பி.எஸ்.ஜி. டெக் 1969ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் சுமார் 2.5 லட்சம் மதிப்பில் சுமார்ட் கிளாஸ் வசதி செய்து கொடுத்துள்ளனர்.

இந்த வகுப்பறையில் மல்டிமீடியா புரஜெக்டர், பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம், மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் தரை தளம் புதுப்பிக்கப்பட்டு திரைகள், மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.



இந்நிலையில், இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசந்திரன் தலைமை தாங்கினார்.



பி.எஸ்.ஜி. டெக் முன்னாள் மாணவர் சங்க தலைவரும் கே.ஜி.குழும இயக்குனருமான கண்ணப்பன் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் வகுப்பறையைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பேராசிரியர் கந்தசாமி, யுனைடெட் குழுமங்களின் தலைவரும் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரம அறங்காவலர் ரங்கநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியின் மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் இப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திருச்சி ஜோனல் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவுக்காகவும், யூனிபார்ம் செலவுக்காகவும் ரூபாய் 75 ஆயிரம் உதவித் தொகையாக சங்க உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உடல்கல்வி ஆசிரியர் தனக்குமார், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பி.எஸ்.ஜி.டெக் முன்னாள் பேராசிரியர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...