திருப்பூரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை துண்டித்த கணவன் கைது!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே வசித்து வந்த மணிகண்டன் என்பவர் குடும்பத்தகராறில் தனது மனைவி பவித்ராவின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் கணவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருபவர் மணிகண்டன்(37). மதுரையை சேர்ந்த இவர் தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் 1 வருடமாக குடியிருந்து வருகிறார்.

அதே பகுதியில் உள்ள கோவிலில் பூவிற்பனை செய்து வரும் இவர் பூசாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.



இதனிடையே இன்று ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மனைவி பவித்ராவின் தலையை துண்டித்து உடலில் பல இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சண்டை தொடர்பாக கேட்ட போது தான் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் உடலையும் தலையையும் கைப்பற்றி மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், இன்று நடந்த சண்டையில் மணிகண்டன் பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த பவித்திரா மணிகண்டனை அடித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பவித்ராவை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பிறகு பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்த நிலையில் இச்சம்பவம் அறிந்த அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்து பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...