கோவை ஒண்டிப்புதூர் நுண்ணுயிர் உரக்கிடங்கில் திடீர் தீ விபத்து!

சிங்காநல்லூர் அடுத்த ஒண்டிப்புதூர் குப்பை கிடங்கில் உள்ள நுண்ணுயிர் உரக்கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: சிங்காநல்லூர் அருகேயுள்ள ஒண்டிப்புதூர் நுண்ணுயிர் உரக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் 57 வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் குப்பை கிடங்கில் உள்ள நுண்ணுயிர் உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது.



இந்த உரக்கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



உரக்கிடங்கில் தீப்பற்றி எரிந்த நிலையில், அதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீ மளமளவென பரவிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தின் காரணமாக உரக்கிடங்கில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமரன், கோவை மாநகராட்சி உதவி நிர்வாக பொறியாளர் ராமசாமி, சுகாதார அலுவலர் ஜீவன்முருகதாஸ் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.



இந்நிலையில் தகவல் அறிந்த முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான நா.கார்த்திக் நேரில் சென்று சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கவுன்சிலர் சாந்தாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...