கோவை கரும்புக்கடை அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஆசாத் நகர் சேர்ந்த அசனார் சேட் (28), குறிச்சி பகுதியைச் சேர்ந்த மன்சூர் ரஹ்மான் (29) மற்றும் அண்ணா நகரை சேர்ந்த அனீஸ் ரகுமான் (28) ஆகியோரை கைது செய்த போலீசார் மூவரிடமும் இருந்த 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கரும்புக்கடை அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கரும்புக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கரும்புக்கடை ஆசாத் நகர் சேர்ந்த அசனார் சேட் ( 28), மற்றும் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மன்சூர் ரஹ்மான் (29) என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் கரும்புகடை அண்ணாநகரை சேர்ந்த அனீஸ் ரகுமான் (28) என்பவருடன் சேர்ந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...