பணி நிறைவு பெற்ற பெண் தூய்மை பணியாளரை ஜீப்பில் வீடு வரை அழைத்து சென்று கௌரவித்த நகராட்சி தலைவர்!

பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் நகராட்சியில் 30 ஆண்டுகள் வேலை செய்து பணி நிறைவு பெற்ற பெண் தூய்மை பணியாளரை நகராட்சி தலைவர் அறிவரசு, அவரை வீடு வரை ஜீப்பில் அழைத்து சென்று கௌரவித்தது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் நகராட்சியில் பணி நிறைவு பெற்ற பெண் தூய்மை பணியாளரை வீடு வரை ஜீப்பில் அழைத்து சென்ற நகராட்சி தலைவரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக தூய்மை பணியாளராக நஞ்சம்மாள் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார்.

இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்த விதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். அதுவும் நகராட்சி 19வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கெளரவிக்க முடிவு செய்தனர். இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். இதற்கு 19வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கலந்து கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்த போது எப்படி நடந்து கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர்.



நகராட்சி தலைவர் பேசும் போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என்று உறுதி கூறினார்.



தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.



தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டு வந்தார். இந்த நிகழ்ச்சி அனைவரது பாராட்டையும் பெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில், பிரியா, ஊர் முக்கியஸ்தர்கள் ஜெயசந்திரன், பி.ஏ.சின்னசாமி, கருப்புசாமி, கோபால், தங்கமணி, ருக்குமணி, திமுக ஐ.டி.விங் உதயகுமார், இளைஞர் அணி சுரேஷ், எல்.பி.எப் கணேஷ் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...