நல்லாறு நீராரு ஆனைமலையாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி!

பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கேரள மாநில அரசுடன் கலந்து பேசி விரைவில் நல்லாறு நீராரு ஆனைமலையாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.


திருப்பூர்: கேரள மாநில அரசுடன் கலந்து பேசி நல்லாறு நீராரு ஆனைமலையாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் ஒன்றியம் பொங்கலூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், சப் கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் திமுக பிரமுகர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மேலும் இந்நிகழ்வில், வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய தார் சாலைகளுக்கான பூமி பூஜை போடப்பட்டது. விவசாயிகளுக்கு இலவசமாக ஈடுபொருள், விவசாய உபகரணங்கள், தென்னங்கன்றுகள், உரம், விதை, பூச்சி மருந்துகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடை திறப்பு விழாவும் நடைபெற்றது.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,



கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்த தமிழக முதல்வர் அந்த மாநில முதல்வரிடம் கல்லாறு நல்லாறு ஆனைமலை ஆறு திட்டம் குறித்து கோரிக்கை வைத்துள்ளார்.

இதன் மூலம் இந்த திட்டமானது விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தமிழக முதல்வரால் நிறுத்தப்பட்டுள்ளது.

விளைச்சல் உள்ளிட்ட சூழ்நிலைகள் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்திருப்பது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து குறைந்த விலைக்கு மக்களுக்கு தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

பில்லூர் - அத்திக்கடவு திட்டத்தில் தடுப்பணை கட்டி துடியலூர், சூலூர், பல்லடம், பொங்கலூர் பகுதிகளுக்கு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணைகள் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தி மேட்டூரில் அனைத்து தேவையான தண்ணீரை கேட்டு பெற்று பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஊரிய தண்ணீர் கிடைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திமுக எம்எல்ஏ மற்றும் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள செல்வராஜ் மற்றும் கட்சியினர் சார்பில் பல்லடம் பொங்கலூர் ஒன்றியங்களில் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜையும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் இன்று அதே இடங்களில் அமைச்சர்கள் தலைமையில் விழா நடைபெற்று வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

மக்களின் வரிப்பணத்தை கொண்டு அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் திட்டங்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இது தான் உலக நீதி.

அதேபோல தமிழ்நாடு ஆளுநர் இலாகா இல்லாமல் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கிவிட்டு தற்காலிகமாக அந்த அறிவிப்பினை ரத்து செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சாமிநாதன் ஆளுநருக்கு உண்டான பதிலை தமிழக முதல்வர் தெரிவித்து விட்டார். அதுவே எங்களது நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...