தனியார் குடியிருப்பு மற்றும் மருத்துவமனை கழிவு நீரை ஓடையில் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், தாளியூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் மருத்துவமனை கழிவு நீரினை மழை நீர் வடிகால் மூலம் ஓடையில் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், தாளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஓனாப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து கழிவு நீரானது இரவு நேரங்களில் அருகில் உள்ள மழை நீர் வடிகாலின் மூலம் திறந்து விடப்படுகிறது.

அந்த நீரானது மழை நீர் வடிகாலின் மூலம் வந்து கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஓடையில் கலக்கின்றது.

அது, கலிங்கநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட வார்டு எண் 7, 4 மற்றும் 18 ஆகிய வார்டு மக்கள் குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் மழை நீர் ஓடையில் சென்று நொய்யல் ஆற்றை அடைகிறது.

மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடை, வருவாய் துறையினரால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்று அங்கு துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லை அதிகரிக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகின்றது.

எனவே, அந்த தனியார் நிறுவனங்களின் கழிவு நீரை ஓடையில் விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...