மதுக்கரை எல்.அன்.அடி நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி!

பெங்களூரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் நண்பர்கள் 4 பேருடன், கோவை வழியாக கேரளாவிற்கு சென்று திரும்பிய போது, மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், படுகாயமடைந்த நவீன்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் நவீன்குமார் (35). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுற்றுலாவிற்காக நண்பர்கள் 4 பேருடன் காரில் கோவை வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் கோவை வழியாக பெங்களூர் செல்ல ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளனர்.



அப்போது மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை ஜல்லிக்கட்டு மைதானம் அருகே வந்த போது நவீன்குமார் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கேரளா நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது மோதியது.

இதில் நவீன்குமார் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக மேற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...