வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி!

வால்பாறையில் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்த அதிமுக முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பி வேலுமணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து வைக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருகை தந்து தனியார் கட்டிடத்தில் அமுல் கந்தசாமியின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வின் போது பொதுமக்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து எஸ் பி வேலுமணியை வரவேற்றனர்.



அலுவலகம் திறந்து வைத்து பொதுமக்களிடம் பேசிய அவர், வால்பாறை பகுதியில் பாடகி இல்லம் தாவரவியல் பூங்கா 116 குடியிருப்பு, சாலை வசதிகள் போன்றவைகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

அதை பராமரிக்க முடியாமல் இந்த ஆட்சி உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்றும் 200 தொகுதிக்கு மேல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியேற்பார்.

அதன் பின்பு வால்பாறை அருகே உள்ள ஐயர்பாடி எஸ்டேட் மற்றும் சோலையார் அணை பகுதியில் கட்சி பூத் கமிட்டி நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உறுப்பினர்களிடம் இரண்டு கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் வருகிற தேர்தலில் சிறப்பாக வேலை செய்து வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



இதனை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, வால்பாறை பகுதியில் படகு இல்லத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கிட வேண்டும்.

வால்பாறை பகுதியில் கிடப்பில் கிடக்கும் வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறவும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், துணை நகரச் செயலாளர் பொன் கணேசன், எம்ஜிஆர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது, சுடர் பாலு, ஐடி விங் சண்முகவேல், ஆடிட்டர் சண்முகவேல் காய்கறி கடை சசி சலாவுதீன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...