வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை உயிரிழப்பு!

வால்பாறை அருகேயுள்ள பச்சைமலை எஸ்டேட் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த குடி தண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டெருமை உடலை மீட்டு அடக்கம் செய்தனர். என் பின்னர் தண்ணீர் சுத்தம் செய்த பிறகு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை அருகே குடிதண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களுக்கு குடி தண்ணீர் பயன்படுத்த 20 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை தொழிலாளர்களுக்கு இயந்திரம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த தண்ணீர் தொட்டியானது வேலி அமைத்து பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தண்ணீர் தொட்டி வழியாக வந்த காட்டெருமை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது.



இந்த நிலையில் இன்று காலையில் தண்ணீர் வினியோகம் செய்வதற்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டிக்குள் காட்டெருமை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வன சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகளும், எஸ்டேட் நிர்வாகத்தினரும் காட்டெருமையை உடலை பல மணி நேரம் போராடி தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு அடக்கம் செய்தனர்.

இதன் பின்னர் தண்ணீரை சுத்தம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...