திருப்பூரில் ரயில் முன் செல்பி எடுத்த போது தவறி விழுந்து இளைஞர்கள் பலி!

ஈரோட்டை சேர்ந்த பாண்டியன் மற்றும் விஜய் ஆகிய இளைஞர்கள் இருவரும், திருப்பூர் அடுத்த அனைப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்று ரயில் முன் நின்று செல்பி எடுத்த போது, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் அருகே ரயில் முன் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மற்றும் விஜய் ஆகியோர், திருப்பூர் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து கொண்டு அப்பகுதியில் உள்ள நீட்டிங் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்தனர்.

இதனிடையே நேற்றைய தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், பாண்டியனும் விஜய்யும் அவருடன் தங்கி உள்ள சக நண்பர்களிடம், ரயில் நிலையம் சென்று ரயில் முன் நின்று செல்பி எடுத்து அனுப்புவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் கூறியதன் படி, திருப்பூர் அடுத்த அனைப்பாளையம், சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்ற விஜய்யும்., பாண்டியனும், அவ்வழியே வந்த ரயில் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.



அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் ரயில் முன் விழுந்த நிலையில், ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் பாண்டியன் மற்றும் விஜயின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்ஃபி மோகத்தால் திருப்பூரில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...