திருப்பூர் அருகே ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

காங்கேயம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.



திருப்பூர்: காங்கேயம் அருகே இயங்கி வரும் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் கண்ணன் மற்றும் நாராயணன் ஆகியோருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், வாடகைக்கு பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் குடோன் இயங்கி வருகிறது.

இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஞயிறு விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லை.



இந்த நிலையில் இந்த பனியன் நிறுவனத்தின் பின்பகுதியில் உள்ள வேஸ்ட் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



தீ மளமளவென பரவிய நிலையில், அருகிலிருந்த பனியன் நிறுவனத்தில் ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் இருந்த பின்னலாடை துணிகள், பின்னலாடை இயந்திரங்களும் தீக்கிரையாகின.



இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், தீயை அணைக்க உள்ளே செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.



இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர், 3 தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் சேதமானது. இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு காரணங்களா என நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் காரணமாக திருப்பூர் காங்கேயம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...