கோவை அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து மளிகை கடையில் ரூ.1.70 லட்சம் பறிப்பு!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி மளிகைக்கடையில் சோதனை நடத்துவது போல் நடித்து ரூ.1.70 லட்சம் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து ரூ.1.70 லட்சம் பறித்துச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் சர்ச் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(52). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு காரில் வந்த 3 பேர் பாலகிருஷ்ணனிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. எனவே, சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து கடைக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்து சில ஹான்ஸ் பாக்கெட்டுகளை எடுத்தனர்.

மேலும் கல்லாவில் இருந்த ரூ. 2 லட்சத்தையும் எடுத்து கொண்டு, பாலகிருஷ்ணனிடம் உங்களுக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்வது யார்? என காட்டுங்கள் என கூறி பாலகிருஷ்ணனையும், அவரது மகனையும் தாங்கள் வந்த காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

சுந்தராபுரம் காமராஜர் தெரு அருகே சென்ற போது காரை நிறுத்திய 3 பேர் கும்பல்ம் தாங்கள் கடையில் எடுத்த ரூ. 2 லட்சத்தில், ரூ. 30 ஆயிரம் மட்டும் பாலகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அவர்களை இறக்கி விட்டு சென்றனர்.

அப்போது தான் அவர்கள் மோசடி பேர்வழி என பாலகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...