ஆனைகட்டி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்த்தில் மூழ்கி இளைஞர் பலி!

கோவை ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வைசாக் (24) என்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் உடலை கைப்பற்றிய தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே தனியார் ரிசார்டின் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்த நஞ்சுண்டன் என்பவரது மகன் வைசாக் (24). இவர் கோவையில் உள்ள தனியார் பிபிஓ ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வைசாக் தனது நண்பர்களுடன் ஆனைகட்டியில் உள்ள கார்னிஷ் ரிசார்ட் என்ற தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது நண்பர்களுடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்த போது, வைசாக்கிற்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார் வைசாக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...