சோமையம்பாளையம் துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைக்க கோரி அகில பாரத மக்கள் கட்சி மனு!

சோமையம்பாளையம் அடுத்த கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து, பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் இருப்பதால், அதனை சீரமைக்க கோரி அகில பாரத கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமையம்பாளையம் அருகேயுள்ள துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் போதிய பாதுகாப்பின்றி பழுதடைந்து இடிந்து நிலையில் உள்ளது.

மேலும், அங்குள்ள கழிவு நீர் தொட்டி மற்றும் கழிவறையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் எடுத்து அதனை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்து தர வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர், அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...