கோவை அருகே சாக்கடைக்குள் விழுந்த நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டு!

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த ஜோஸ் கார்டன் பகுதியில் நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்ற நிலையில், அதில் 4 குட்டிகள் சாக்கடைக்குள் விழுந்துள்ளன. அதனை பத்திரமாக மீட்டு அதன் தாயிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகே சாக்கடைக்குள் விழுந்த நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகேயுள்ள ஜோஸ் கார்டன் பகுதியில் தெருநாய் ஒன்று எட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் அதில் நான்கு குட்டிகள் அங்கிருந்த சாக்கடை ஒன்றிற்குள் விழுந்துள்ளது.

இதனால் தாய்நாய் நீண்ட நேரமாக சாக்கடையை பார்த்து கத்திக் கொண்டிருந்த நிலையில் அதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான முகமது மீரான் உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.



தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அந்த நான்கு குட்டிகளையும் பத்திரமாக வெளியே எடுத்து அதன் தாயுடன் சேர்த்தனர்.



தகவல் அளித்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு சென்று நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...