கோவையில் மற்றொரு பிரமாண்டம்..! - தமிழகத்தின் மிகப்பெரிய திரையை கொண்ட திரையரங்கு திறப்பு!

கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, பிராட்வே மெகாப்ளக்ஸ் வளாகத்தில் தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை கோவையில் அறிமுகம் செய்துள்ளனர். 70 அடி அகல திரை கொண்ட அரங்கு தான் தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தின் மிகப்பெரிய திரையான 70 அடி அகலம் கொண்ட எப்பிக் வசதி கொண்ட திரையரங்கு கோவையில் திறக்கப்பட்டுள்ளது.

கியூப் சினிமா மற்றும் பிராட்வே சினிமாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து கோவையில் உள்ள பிராட்வே மெகாப்ளக்ஸ் வளாகத்தில் தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை கோவையில் அறிமுகம் செய்தனர்.

இது தமிழகத்தின் முதலாவது எப்பிக் PLF திரை வசதி கொண்ட அரங்கு மட்டுமல்ல இந்தியாவின் இரண்டாவது எப்பிக் PLF திரையரங்கு ஆகும்.

பிராட்வேயில் உள்ள இந்த திரை 70 அடி அகலம், 37 அடி உயரம் கொண்ட திரை ஒரு சொகுசான சூழல் பொருந்திய அரங்கில் மிக சௌகரியமான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு இருக்கையும் திரைப்படத்தை பார்க்கும் போது சிறந்த அனுபவத்தை பெரும் படி அமைக்கபட்டுள்ளது.



இந்த எப்பிக் அரங்கில் BARCO, 4K, RGB லேசர் புரோஜெக்டர் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு காட்சியையும் மிக துல்லியமாக, அதிக பிரகாசமாக, மிக சிறந்த வண்ண அம்சங்களுடன் பார்த்து மகிழ முடியும். ஒலி அம்சத்தை பொறுத்தவரை DOLBY, Atmos அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது பேசிய கியூப் சினிமாவின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹாத்கி கூறியதாவது,



சினிமா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை கியூப் நிறுவனம் இதில் எப்போதுமே முன்னணியில் உள்ளது. எங்களின் பிரீமியம் திரை வசதிகள் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை அனுபவிக்க வழிவகை செய்யும். இதனால் பார்வையாளர்கள் மீண்டும் இந்த அரங்கிற்கு நிச்சயம் வர விரும்புவார்கள்.

இந்த அரங்கில் உள்ள திரையின் அளவு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ஒலி, ஒளி வசதிகள் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும்.இவ்வாறு கூறினார்.

பிராட்வே சினிமாஸின் நிர்வாக இயக்குநர் சதிஷ் குமார் கூறியதாவது, நாங்கள் பிராட்வே மல்டிபிளக்ஸ் பற்றி முதலில் திட்டமிட்டபோதே இது மல்டி பிளக்ஸ் ஆக இருப்பதை தாண்டி குடும்பங்கள் தங்கள் ஓய்வு நேரத்தை மிக சிறப்பாக கொண்டாடி மகிழக் கூடிய இடமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கு நிச்சயமாக ஈடில்லாத திரைப்பட அனுபவத்தை வழங்கும். தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரையை கொண்ட வளாகமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...