மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வேண்டும் - அதிமுக உறுப்பினர்கள் திருப்பூர் மேயரிடம் கோரிக்கை மனு!

மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, திருப்பூரில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.



திருப்பூர்: மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர்கள் மேயரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரி சம்பந்தமான சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குப்பை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை குறித்து மேல்முறையீட்டு குழு அமைக்க வேண்டும்.

மேலும், மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...