கோவை வடக்கு, கிழக்கு, மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு!

கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ கிழக்கு மண்டலத்தில்‌ ரூ.1.88 கோடி மதிப்பிட்டிலான தார்சாலை‌ பணிகள்‌, மத்திய மண்டலத்தில்‌ ரூ.1.4 கோடி மதிப்பீட்டில்‌ வீடற்ற ஆதரவற்றோர்‌ தங்கும்‌ விடுதி கட்டுமான‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு, மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண் 30க்கு உட்பட்ட கணபதி பகுதியில்‌ மாநகராட்சி தூய்மை பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணாவு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மை பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.30க்குட்பட்ட கணபதி பகுதியில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌‌, கொசு ஓழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர், மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளார்கள்‌ வீடுவீடாக‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றவும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறியும்‌ பணிகளில்‌ ஈடுபடுமாறு அறிவுரைகளை வழங்கினார்.



இதன் பின்னர், வார்டு எண் 30க்கு உட்பட்ட கணபதி பகுதியில்‌ தூய்மை பணிகளில்‌ சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளரை பாராட்டி மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ பரிசுகளை வழங்கினார்‌.



தொடர்ந்து‌, கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.83க்குட்பட்ட கடலைக்கார சந்து பகுதியில்‌ உள்ள மாநகராட்சி இடத்தில்‌ தன்தயால்‌ அந்தயோத்யா யோஜனா தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ்‌ ரூ.1.4 கோடி மதிப்பீட்டில்‌ வீடற்ற ஆதரவற்றோர்‌ தங்கும்‌ விடுதி கட்டுமான பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.52க்கு உட்பட்ட ஹட்கோ காலனியில்‌ கோயம்புத்தூர்‌ பாராளுமன்ற உறுப்பினா்‌ பி.ஆர்.நடராஜன்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ பொது விநியோகத்திட்ட கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, விரைவில்‌ மின்‌ இணைப்பு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்‌.



பின்னர்‌, கிழக்கு மண்டலம் ‌வார்டு எண் 58க்குட்பட்ட எஸ்‌.ஆர்‌.டி லே-அவுட்‌ மற்றும்‌ லட்சுமணன்‌ நகர்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகாப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின்‌ (TURIP-Phase-3) 2022-23-ன் கீழ்‌ ரூ.1.88 கோடி மதிப்பிட்டில்‌ 1.96 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை நேரில்‌ சென்று பார்வையிட்டார்,



அதன்‌ தரத்தினை பரிசோதனை செய்து ஆய்வு செய்து, நடைபெற்று வரும்‌ தார்சாலை பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.58க்கு உட்பட்ட சிங்காநல்லூர்‌, நந்தா நகர் பிரதான சாலையில்‌ அனுமதி பெறாமல்‌ சாலையை தோண்டி குடிநீர்‌ குழாய்‌ பழுது சரிசெய்யும்‌ பணி நடைபெற்று வருவதை ஆய்வின் போது பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளா்‌, மாநகராட்சியிடம்‌ உரிய அனுமதி பெற்று பணி செய்ய வேண்டும்‌ எனவும்‌, இதுபோன்று மாநகராட்சியிடம்‌ உரிய அனுமதி பெறாமல்‌ பணிகள்‌ மேற்கொண்டால்‌ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்‌, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அபராதமும்‌ விதிக்கப்படும்‌ என எச்சரித்தார்‌..

பின்னர்‌, வார்டு எண்‌.53க்குட்பட்ட லட்சுமிபுரம்‌, விஸ்வநாதன்‌ லே-அவுட்‌ பகுதியில்‌ கோயம்புத்தூர்‌ பாராளுமன்ற உறுப்பினா்‌ பி.ஆர்.நடராஜன்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ பொது விநியோகத் திட்ட கட்டிடத்தையும்‌, 

வார்டு எண்‌.61க்குட்பட்ட சிங்காநல்லார்‌ பகுதியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ ரூ.68.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ கூடுதல்‌ மருத்துவமனை கட்டிடத்தையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, கட்டுமானப்‌ பணியை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க அறிவுறுத்தினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.61க்குட்பட்ட சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ ரூ.4.5 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டு வரும்‌ கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளையும்‌, 



செளரிபாளையம்‌, இந்திரா நகா்‌ பகுதியில்‌ உள்ள சமுதாய கூடம்‌ மற்றும்‌ கழிவறைகளை நேரில்‌ பார்வையிட்டு, அவற்றை புனரமைத்து மக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ அறிவுறுத்தினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...