கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி திருப்பூரில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை முறையாக இயக்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போக்குவரத்து பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் காங்கேயம் சாலை சி டி சி பணிமனை டிப்போ முன்பாக கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்தின் போது திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் ஏராளமான நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன, கொரோனா காலத்திற்கு பின்பு இயல்பு நிலை திரும்பி உள்ள இச்சூழ்நிலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன.



இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதியில் பள்ளிகளுக்கும் சென்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும், உரிய நிறுத்தங்களில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். சனி ஞாயிறு மற்றும் திருவிழா காலங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், கட்டணமில்லா பயணம் செய்யும் பெண்கள், மாற்று திறனாளிகள், மாணவ மாணவிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இனியும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...