தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை திரும்ப பெற சைமா கோரிக்கை

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சைமா சார்பில் அதன் தலைவர் எம்.செந்தில்குமார் கோரிக்கை கடிதத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த கோரிக்கை மனுவினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், மற்றும் அதன் நகலினை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் டி.சண்முகம், வருவாய்துறை அமைச்சர் பி.உதயகுமார், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வணிகவரித்துறை கூடுதல் தலைமை செயலர் சி.சந்திரமௌலி, மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை முதன்மை செயலர் ஹர்மீந்தர் சிங், கிராமபுற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் சி.முனியநாதன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய்துறை செயலர் பி.சந்திரமோகன், தொழில்துறை முதன்மை செயலர் விக்ரம் கபூர், கிராமபுற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோருக்கும் சைமா தலைவர் அனுப்பியுள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- 

"தமிழக ஜவுளித் தொழில் நாட்டின் 3-யில் ஒரு பங்கு இருப்பதுடன், 46 சதவிகித நூல் உற்பத்தி கொள்ளளவையும், 22 சதவிகித விசைத்தறி உற்பத்தி கொள்ளளவையும், 70 சதவிகித பின்னலாடை உற்பத்தி கொள்ளளவையும், 15 சதவிகித கைத்தறி உற்பத்தி கொள்ளளவையும், 70 சதவிகித ஜவுளி இயந்திர மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி கொள்ளளவையும் கொண்டு சுமார் 50 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்பபு கொடுத்து இந்தியா மற்றும் தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது.

2008-ம் ஆண்டு முதல் சுமார் ஏழு ஆண்டுகள் தமிழகம் கடுமையான மின் வெட்டு காரணமாகவும், அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் ஜவுளி ஆலைகளுக்கு வழங்கி வரும் மானியங்கள் காரணமாகவும், கூடுதலான மின்சார செலவு, ஊதிய செலவு, ஆள்பற்றாகுறை போன்ற பிரச்சனைகளால் தொடர்ந்து பெரும்பாலான ஆலைகள் மற்றும் விசைத்தறிகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

மேலும், ஜவுளித் தொழிலுக்கு தேவையான பருத்தி பஞ்சு மற்றும் பாலியஸ்டர் இழை போன்ற பஞ்சுகளை சுமார் 97 சதவிகிதம், கிலோ ஒன்றுக்கு ரூ.6 வரை லாரி வாடகை, செலவழித்து வாங்க வேண்டியுள்ளது. அதே போல உற்பத்தியாளர்கள் நூல் மற்றும் துணிகளை இதர மாநிலங்களுக்கு விற்பதற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை லாரி வாடகைக்கு செலவழிக்க வேண்டியுள்ளது.

தற்போது தமிழக அரசு எந்தவித முன்னறிவிப்புமின்றி பெட்ரோல் மீதான வாட் வரியை 27 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 21.43 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகவும் உயர்த்தியுள்ளதால் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை ரூ.3.77-ம், டீசல் விலை ரூ.1.76-ம் உயர்ந்துள்ளது.

இந்த வரி உயர்வு ஜவுளி தொழிலின் ஸ்திரதன்மையை பெரிதும் பாதிக்கும் என்பதை தமிழக முதரமச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே, பருத்தி மற்றும் பருத்தி கோன் நூல் மீது விதிக்கப்படும் 5 சதவிகித வாட் வரியாலும் (மத்திய விற்பனை வரி 2 சதவிகிதம் ஆகவும், போட்டி மாநிலங்களில் பூஜ்யம் அல்லது 2 சதவிகித வாட் வரி இருக்கும்பட்சத்தில்) பருத்தி மற்றும் விவசாய சந்தை குழுவால் பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சு மீது விதிக்கப்படும் 1 சதவிகித வரி காரணமாக தமிழக ஜவுளித் தொழில் இந்தியா மற்றும் உலகச்சந்தையில் போட்டியிட முடியாமல் தவித்து வருகிறது என்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு கொள்கிறோம்.

அவ்வப்போது ஏற்படும் மின்தடங்கல், மாதம் ஒரு நாள் பராமரிப்புக்காக நிறுத்தப்படும் மின்விநியோகம் காரணமாக ஜவுளி ஆலைகள் டீசல் ஜெனரேட்டர்களை உபயோகிக்க வேண்டியுள்ளதால் இந்த விலை உயர்வு ஜவுளித் தொழிலை பெரிதும் பாதிக்கும். மத்திய அரசு வருகின்ற ஜூலை 1ம் தேதியிலிருந்து சரக்கு சேவை வரியை அமல்படுத்த உள்ள நிலையில் தற்போது உள்ள வரிகளில் எந்த ஒரு மாற்றங்களையும் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் நீண்ட காலமாக கோரி வந்த பருத்தி கோன் நூல் மீதான வாட் வரி குறைப்பு மற்றும் பருத்தி, பருத்தி கழிவு பஞ்சு மீது விவசாய சந்தை குழுவால் விதிக்கப்படும் 1 சதவிகித வரி நீக்கம் போன்ற மனுக்களுக்கு விற்பனை வரி ஆணையர் ஜிஎஸ்டி வரி விரைவில் அமல்படுத்த உள்ளதால் வரி மாற்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று எங்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நாங்கள் 2012-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி நேரடியாக சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை வைத்த போது உடனடியாக பரிசீலக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், சுமார் ஐந்தாண்டுகள் ஆகியும் எங்கள் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது என்பதையும், சுமார் 20 ஆண்டுகளாக புதிய ஜவுளி கொள்கை அறிவிக்கப்படவில்லை என்பதையும் விண்ணப்பித்துக் கொள்கிறோம்.

எனவே, தற்போதுள்ள தமிழக ஜவுளித் தொழில் மற்றும் இதர தொழில்கள், மேலும் பொது மக்களின் நன்மையை கருதியும், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது தற்போது உயர்த்தப்பட்டுள்ள வாட் வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறோம்."

இவ்வாறு சைமா தலைவர் எம்.செந்தில்குமார் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...