கோவையில் பிரபல வைர நகை உற்பத்தி நிறுவன அதிபர் ரூ.60 லட்சம் மோசடி - முன்னாள் ஒப்பந்த ஊழியர் பரபரப்பு புகார்!

கோவை ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வைர நகை உற்பத்தி நிறுவன அதிபர் மீது ரூ.60 லட்சம் மோசடி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்த ஊழியரான பரமகுரு என்பவர் புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவையில் உள்ள பிரபல வைர நகை உற்பத்தி நிறுவன அதிபர் ரூ.60 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்த ஊழியர் புகார் அளித்துள்ளார்.



கோவை பன்னிமடை அடுத்த பழனிகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமகுரு. இவர் கோவை ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தங்க மற்றும் வைர நகை தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தங்க நகை உற்பத்தி பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் அவரது பணியை பாராட்டி நிறுவன உரிமையாளரான சீனிவாசன் கடந்த 2017 ம் ஆண்டு முதல் அதே நிறுவனத்தில் வைர நகை உற்பத்தி பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி உள்ளார். பரமகுருவின் பணிக்காக நகை தயாரிப்பின் அடிப்படையில் ஒரு ஊதியமும் மற்றும் மாத சம்பளமாக 30,000 ரூபாயும் தருவதாக நிறுவன உரிமையாளர் ஸ்ரீனிவாசன் உறுதி அளித்துள்ளார். 

அதுமட்டுமின்றி அப்பிரிவில் பணியாற்றுவதற்காக பரமகுரு பரிந்துரையின் பெயரில் 45 ஊழியர்களையும் நியமித்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு உற்பத்தி குறைவை காரணம் காட்டி பரமகுரு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் அவருக்கு தர வேண்டிய 60 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் உரிமையாளர் சீனிவாசன் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

பலமுறை பரமகுரு தனக்கு தரவேண்டிய தொகையை தரும்படி கேட்டபோது நிறுவன அதிபர் சீனிவாசன் அவரை தகாத வார்த்தை பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வலியுறுத்தி, பரமகுரு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,



நான் வைர நகை பிரிவில் பணியில் இணைவதற்கு முன்பு வெறும் ஐந்து கோடி ரூபாய் மட்டுமே அந்த நிறுவனத்தில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. எனது கடுமையான உழைப்பின் அடிப்படையில் தற்போது பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மேலும் எனக்கு தர வேண்டிய தொகையை கேட்டு உரிமயாளரின் வீட்டிற்கு சென்றால் தரக்குறைவாக பேசி வீட்டு பக்கம் வந்தால் தொலைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். தன்னிடம் வெற்று முத்திரைத்தாளில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...