பல்லடம் அருகே தனியார் பேருந்து மோதி விபத்து - 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேதம்!

பல்லடம் அரசு மருத்துவமனை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.



திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் வாடகைக்கு செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகள் என வாகனங்களை வரிசைப்படுத்தி நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ராஜலட்சுமி என்ற தனியார் பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பல்லடம் நோக்கி சென்றுள்ளது.



அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.

இந்த விபத்தில் பேருந்தில், பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...