கோவையில் குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட சிறார்கள் நலனுக்காக காவல்துறை நடத்திய ‘ஏணிப்படிகள்’ நிகழ்வு!

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாநகரில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களின் நலனுக்காக, ‘ஏணிப்படிகள்’ என்ற இளஞ்சிறார் மறுவாழ்வு நிகழ்ச்சி கோவை மாநகர காவலர் சமுதாய கூடத்தில் (Police Community Hall) நடைபெற்றது.


கோவை: தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் குற்றவழக்குகளில் தொடர்புடைய இளஞ்சிறார்கள் நலனுக்காக காவல்துறை சார்பில் ஏணிப்படிகள் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை மாநகர எல்லைக்குள் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள இளஞ்சிறார்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படாமல் சக மனிதர்களாக பாவிக்கப்படுவதற்காகவும், அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் காவல்துறை சார்பில், ஏணிப்படிகள் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட இளஞ்சிறார்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கவும் சம்மந்தப்பட்ட இளஞ்சிறார்கள் தங்களது பெற்றோர்களுடன் இந்த நிகழ்ச்சிக்கு வரைவழைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், இளஞ்சிறார்கள் மீண்டும் குற்றநிகழ்வுகளில் ஈடுபடாமல் இருக்க தேவையான ஆலோசனைகளும், படிப்பில் கவனம் செலுத்தி பெற்றோர் சொல் கேட்டு நன்மதிப்பை பெற தேவையான ஆலோசனைகள் குழந்தைகள் பாதுகாப்பு நல நிபுணர்கள் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளஞ்சிறார்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில், படிப்பு வசதி மற்றும் மருத்துவ உதவி போன்றவற்றைக் கோரியுள்ளனர்.

இச்சிறார்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க அந்தந்த காவல் நிலையத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மூலமாக தக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்து உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் (வடக்கு) G.சந்தீஸ், காவல் துணை ஆணையர் (தெற்கு) சண்முகம், கோயமுத்தூர் இளஞ்சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் மகேஷ், ஜெனிபர் புஷ்பலதா மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தின் தலைவர் சுப்ரமணியம் கருப்பையா, வழக்கறிஞர் சிவசங்கரி மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சேரன் மற்றும் பாரதியார் பல்கலைக் கழக விரிவுரையாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...