கோவையில் நகைக்கடை அதிபரிடம் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி - தம்பதி மீது புகார்!

கோவை ராஜவீதியில் இயங்கி வரும் நகைக்கடை உரிமையாளரிடம் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நகை வியாபாரி ரகுநாத் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன


கோவை: கோவை மாவட்டம் ராஜவீதியில் நகைக்கடை உரிமையாளரிடம் 2 கிலோ தங்கம் வாங்கிக் கொண்டு பணம் தராமல் மோசடி செய்ததாக தம்பதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் விநாயகபுரம் அருகேயுள்ள விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (56). இவர் கோவை ராஜவீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ரமேஷ் குமாருக்கு கோவை செட்டிவீதியை சேர்ந்த நகை வியாபாரி ரகுநாத் (43) என்பவருடன் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. ரகுநாத், ரமேஷ்குமாரிடம் நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரமேஷ்குமார் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கத்தை ரகுநாத்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், நகைகளை வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் ரகுநாத் அதற்குண்டான பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

ரமேஷ்குமார் பலமுறை கேட்டும் அவர் நகை, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், ஏமாற்றமடைந்த நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமார் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரகுநாத் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டதாக ரகுநாத் மனைவி ஸ்ரீலேகா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...