கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் சு.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்!

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணித்தல், இயற்கை சீற்றம், நோய் தொற்று மற்றும் அவசர கால பணிகளை மேற்கொள்ள வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தற்போது கோவை மாவட்டத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர் சு.முத்துசாமி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...