கோவையில் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்!

கோவை‌ சின்னவேடம்பட்டி அருகே மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார். இதேபோல், கணபதி பகுதியில் புனரமைக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி வகுப்பறைகள்‌ மற்றும் கழிவறைகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.3க்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியில்‌ மாநகராட்சி, லட்சுமி மில்ஸ்‌ நிறுவனம்‌ லிமிடெட்‌, சக்தி சுகாஸ்‌ லிமிடெட்‌, WOW EDUCARE மற்றும்‌ பாலச்சந்தர் ஆகியோர்‌ இணைந்து நமக்கு நாமே திட்டத்தில்‌ அப்ஸ்விங்ஸ்‌ எடுக்கேர் (UPSWINGS EDUCARE) நிறுவனம்‌ மூலம்‌ மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கிராந்திகுமார்‌ பாடி மக்கள்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌. கல்வி விளையாட்டு உபகரணங்கள்‌ 118க்கும்‌ மேற்பட்ட விளையாட்டு கல்வி பொம்மைகள்‌ மூலமாக தொலைக்காட்சி வாயிலாக கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரட்டை திண்ணை, விளையாட்டு உபகரணங்கள்‌, பூங்கா மற்றும்‌ குடிநீர், கழிவறை வசதிகள்‌ செய்யப்பட்டுள்ளது. 40க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ இந்த அங்கன்வாடி மையத்தில்‌ கல்வி பயின்று வருகின்றனர்.



அதனை தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்குட்பட்ட கணபதி மாநகராட்சி துவக்க பள்ளியில்‌ மாநகராட்சி நிர்வாகம்‌, சி.ஆர்.ஐ.பம்ஸ்‌ மற்றும்‌ கோவை‌ ரவுண்டு டேபிள்‌, லேடீஸ்‌ சர்கிள்‌ ஆப்‌ இந்தியா உள்ளிட்ட தன்னார்வலர்கள்‌ இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.30 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறையை மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப்‌ திறந்து வைத்தார்.



இதன் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

கோவை‌ கணபதி மாநகராட்சி பள்ளியின்‌ சி.ஆர்.ஐ.பம்ஸ்‌ மற்றும்‌ கோவை‌ ரவுண்டு டேபிள்‌, லேடீஸ்‌ சர்கிள்‌ ஆப்‌ இந்தியா உள்ளிட்ட தன்னார்வலர்கள்‌ கணபதி மாநகராட்சி துவக்கபள்ளியை தத்தெடுத்து பராமரிக்கவும்‌, புனரமைக்கவும்‌, தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும்‌ இசைவு தெரிவித்துள்ளனர்.

முறைப்படி விண்ணப்பத்தால்‌ உரிய பரிசீலனை செய்யப்படும்‌. மேலும்‌, கோவை மாநகராட்சியில்‌ நமக்கு நாமே திட்டத்தில்‌ பல்வேறு பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர தன்னார்வலர்கள்‌ முன்வர வேண்டும்‌.

நமக்கு நாமே திட்டத்தில்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறை அமைக்க நிதி வழங்கிய தன்னார்வலா்களுக்கு நன்றியையும்‌ பாராட்டுகளையும்‌ தெரிவித்து கொள்கிறேன்‌.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...