வால்பாறையில் கனமழை - பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு!

வால்பாறை பகுதியில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சு.முத்துசாமி, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின், கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பாதிப்புகள் குறித்து, தமிழக வீட்டு வசதி துறை மற்றும் நகர் புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், கன மழையால் பாதிப்பு ஏற்படாமலும், பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க பேரிடர் மீட்பு படையினர் 106 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, வெள்ள பாதிப்பு பகுதியில் உள்ள மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலை கல்லூரியில் அமைக்கபட்டுள்ள முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அதிக வெள்ளம் வரும் பகுதியான கூழாங்கள் ஆறு மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள வாழை தோட்ட பகுதியை அமைச்சர் ஆய்வு செய்தார்.



இதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது,



வால்பாறை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை முதலமைச்சர் பார்வையிட அறிவுறுத்தினார். அதன்படி, நான் வால்பாறை பகுதிக்கு வந்து ஆய்வு செய்கிறேன். வால்பாறை பகுதியில் மழையால் பதிப்புகள் இல்லை. பாதிப்புகள் வரும் முன் மாவட்ட நிர்வாகம் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளனர்.

அனைத்து துறைகளும், தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை துறை, மருத்துவ துறை, தயார் நிலையில் உள்ளனர் 106 பேரிடர் படையினர் பேரிடர் கருவிகளை வைத்து தயார் நிலையில் உள்ளனர். 6 இடங்களில் மரம் விழுந்து உடனடியாக சரி செய்யபட்டு உள்ளது.

இரண்டு ஒரு இடத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. அதையும் உடனடியாக சரி செய்யப்பட்டது. 10 இடங்களில் அவசரம் என்றால் மக்களை தங்க வைக்க முகாம் தயார் நிலையில் உள்ளது.

மழையினால் என்ன பிரச்சினை வந்தாலும் அதை உடனடியாக சரி செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் வால்பாறையில் உள்ள அதிகாரிகள் இணைந்து வேலைகளை செய்து உள்ளனர். அதை நான் முதல்வரிடம் தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...