தாராபுரம் அருகே வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய பந்தல் தொழிலாளி - பரபரப்பு!

தாராபுரம் அருகே ரோட்டாலவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வனப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. விசாரணையில் இறந்தவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பந்தல் தொழிலாளி தாமோதரன் என்பது தெரியவந்த நிலையில் கொலையா தற்கொலையா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வனப்பகுதியில் பந்தல் தொழிலாளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தாமோதரன் (52). பந்தல் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் பந்தல் வேலைக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்

இந்த நிலையில் தாமோதரன் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மகன் மற்றும் மகள்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் தாமோதரன் கிடைக்கவில்லை.



இந்த நிலையில் இன்று காலை ரெட்டாலவலசு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே வனப்பகுதியில் உள்ள மரத்தில் ஆண் சடலம் ஒன்று தொங்குவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தாமோதரன் உடலை பரிசோதனை செய்து இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா அல்லது மன உளைச்சலின் காரணமாக அவரே தற்கொலை செய்து கொண்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...