திருப்பூரில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவக்கம்!

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியில் 40 அரங்குகளில் இயற்கை சார்ந்த உற்பத்திக்கான சாயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


திருப்பூர்: பழங்கரையில் உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவங்கியது.

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள இந்தியா நிட் பேர் கண்காட்சி வளாகத்தில் டெக்ஸ்டைல் எக்ஸ்டெலன்ஸ் நிப்ட்- டீ கல்லூரி சார்பில் 2-வது உலக அளவிலான இயற்கை சார்ந்த உற்பத்திக்கான சாயம் தொடர்பான கண்காட்சி நேற்று தொடங்கியது.



வருகிற எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் திருப்பூர் பின்னலாடை துறை வளர்ச்சிக்கு தேவையான இயற்கை சாயங்கள், ராணுவ உடைகள் தயாரிப்பதற்கான சாயங்கள், ஆக்டிவ் வியர், விளையாட்டு ஆடைகள் தயாரிப்பதற்கான சாயங்கள், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும், கோடைகாலத்தில் அணியக்கூடிய ஆடைகள் உற்பத்திக்கான சாயங்கள், சுமல் பிரி கார்மெண்ட்ஸ், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



பின்னலாடை உற்பத்தியாளர்கள் தற்போது பருத்தியினால் ஆன ஆடைகள் தயாரிப்பில் இருந்து தங்களது கவனத்தை சிந்தட்டிக் ரக ஆடைகள் தயாரிப்பில் நகர்ந்துள்ளதால் அதற்கான இயந்திரங்கள் சாயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காட்சியை ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...