வால்பாறையில் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி கழக இயக்குனர் ஆய்வு!

வால்பாறையில் கன மழை பெய்து வரும் நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் கோவை மாவட்ட தென்மேற்கு பருவ மழை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: வால்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து தொழில் வளர்ச்சிக் கழக இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் மரங்கள் விழுந்த நிலையில், சரி செய்யப்பட்டு உள்ளது.

மழையினால் பொது மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் கோவை மாவட்ட தென்மேற்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் வால்பாறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகள் குறித்தும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்தும் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.



இதில் அதிகமாக தண்ணீர் செல்லும் கூழாங்கல் ஆறு, குடியிருப்பு அருகில் செல்லும் வாழை தோட்டம் ஆறு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரி, வால்பாறை மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஜெயஸ்ரீ முரளிதரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இவர்களுடன் வால்பாறை தாசில்தார் அருள் முருகன், நகர மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி செல்வம் மற்றும் வால்பாறை நகராட்சி ME. வெங்கடாசலம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...