கோவையில் தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய ஊழியர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடியதாக அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சந்தோஷ்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.




கோவை: கவுண்டம்பாளையம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கவுண்டம்பாளையம் அடுத்த டிவிஎஸ் நகர் சாலையில் உள்ளது காவேரி குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிந்து வருபவர் சந்தோஷ் குமார்.

இவர் நேற்று இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திடமான வகையில் நின்று கொண்டிருப்பதை பார்த்த நிறுவன பொருப்பாளர் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளார்.

அப்போது அதில் 6 பால் வால்வுகள் திருடி மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...