ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் - அமைச்சர் சு.முத்துச்சாமி பங்கேற்பு!

கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.

கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று பெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வீட்டு வசதி நகர் புறம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான முத்துசாமி தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இதில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்.

முன்னாள் எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன், கோவை செல்வராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...