மாநகராட்சிப் பணிகள் குறித்து 32-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 32-வது வார்டுக்கு உட்பட்ட விசுவாசபுரம் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றுவதையும் ஆய்வு செய்தார். 





பின், விளாங்குறிச்சி பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நகர்நல மையக் கட்டிட பணிகளையும், ஜீவா நகர் மற்றும் உதயா நகர் பகுதியில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகாட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...