கோவையில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பிடித்தம் செய்யப்பட்ட ஜிபிஎப், எஸ்.பி.எஃப் -ஐ உடனடியாக வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம், ரூ. 6780 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.



கோவை: குறைந்தபட்ச ஓய்வூதியம், ரூ. 6780 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இதில் கலந்து கொண்டவர்கள் மாநிலம் முழுவதும் பிடித்தம் செய்யப்பட்ட ஜிபிஎப், எஸ்.பி.எஃப் தொடர்ந்து வழங்கப்படாமல் உள்ளது. எனவே விரைவில் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6780 அகவிலை படியுடன் வழங்க வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு முன்பணம் குறித்து அரசாணை வெளியிட வேண்டும்.



இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...