டிஐஜி விஜயகுமார் மரணம் - கோவையில் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோவை - தடாகம் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாருக்கு இளைஞர்கள் பேனர் வைத்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிஐஜி விஜயகுமார் இறப்பிற்கு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர், காவல் அதிகாரிகள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது இந்த தற்கொலை காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் ஊரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் VKV சுந்தரராஜ், தடாகம் காவல்துறையினர் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



இளைஞர்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...