நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்லடத்தில் கைத்தறி நெசவாளர்கள் பேரணி!

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன் பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவாங்கர் சமுதாய மக்கள் கைத்தறி நெசவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கைத்தறி மூல பொருளாக கருதப்படும் பட்டு நூல், பருத்தி நூல் ஆகியவற்றின் விலையானது கடுமையாக உயர்ந்து நிரந்தரமான விலை இல்லாததால் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.



இதையடுத்து காமநாயக்கன் பாளையம் சவுண்டம்மன் கோவிலின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் பேரணியாக அங்குள்ள தபால் நிலையம் நோக்கி சென்றனர்.



பட்டு மற்றும் பருத்தி நூல்களுக்கான விலையை நிர்ணயம் செய்யக்கோரியும், குறியீடு போடப்பட்ட கைத்தறி துணி வகைகளை கைத்தறியிலேயே நெசவு செய்ய அரசாணை இருக்கும் நிலையில் அதனை செயல்படுத்த தமிழக முதல்வரை வலியுறுத்தியும், 250 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்து நூதன கவன ஈர்ப்பு போராட்டதில் ஈடுபட்டனர்.



இந்த நூதன போராட்டத்தில் சூலூர் தொகுதி அதிமுக எம் எல் ஏ கந்தசாமியும் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தேவாங்கர் சங்க தலைவர் சண்முகம், கே கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் படையப்பா மூர்த்தி மற்றும் 200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...